Connect with us

இன்னும் திருந்தலையா ஐஸ்வர்யா?

பொழுதுபோக்கு

இன்னும் திருந்தலையா ஐஸ்வர்யா?

பல வாரங்களாக எவிக்சன் பட்டியலில் தப்பிய ஐஸ்வர்யா, இந்த வார்ம் சிக்கியுள்ளதால் மக்கள் அவருக்கு வச்சு செய்ய காத்திருக்கின்றனர். இந்த ஒரு வாரமாவது நல்ல பொண்ணு போல் நடித்தால் ஒருவேளை மக்கள் இரக்கம் ஓரளவிற்காவது கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் இப்போதும் அவருடைய சுயரூபம் அவ்வப்போது வெளியே வருகிறது. நாமினேஷன் பிராஸசின்போது விஜயலட்சுமியுடன் மோதியதை மனதில் வைத்து இன்றும் விஜயலட்சுமியுடன் சண்டைக்கு செல்கிறார் ஐஸ்வர்யா. சர்வாதிகாரி டாஸ்க்கில் இருந்து அவருடைய முகம் அவ்வப்போது வெளிவருகிறது.

அதேபோல் இத்தனை வாரங்களாக ‘அன்பு’ என்ற ஆயுதத்தை வைத்து திறமையாக விளையாடி கொண்டிருந்த மும்தாஜின் முகமூடியும் கிழிந்துவிட்டதாகவே இந்த புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது மொத்தத்தில் மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா ஆகிய மூவரும் பிக்பாஸ் டைட்டிலுக்கு தகுதியில்லாதவர்கள் என்பதை அவர்களுடைய நடவடிக்கையே காட்டி கொடுத்துவிட்டது. மொத்தத்தில் இன்னும் ‘திருந்தலையா ஐஸ்வர்யா’ என்றுதான் கேட்க தோன்றுகிறது.

Continue Reading
To Top