இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்

லண்டன்:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 23 ஆட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன. எதிர்பாராத விதமாக நிறைய திருப்பங்களும் சம்பவங்களும் இந்த தொடரில் பலமுறை நடந்துள்ளது.

வலிமைமிக்க இந்திய அணி:

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என்று மிக மிக வலுவான அணிகள் அனைத்தையும் இந்தியா மிகச் சிறப்பாக வீழ்த்தி விட்டது. இதுவரை ஒரு தோல்வியையும் சந்திக்காமல், மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி,  இந்தியாதான் இந்த தொடரில் மிகவும் வலிமையான அணியாக திகழ்கிறது.

கோலியின் புது முடிவு:

இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்திய அணியில் வீரர்கள் மாற்றப்பட இருக்கிறார்கள். 11 பேர் கொண்ட இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்ய கோலி முடிவெடுத்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் இத்தனை நாள்தான் இப்படி நடக்குமோ?

அணியில் ரோஹித், கோலி, பாண்டியா, தோனி, பும்ரா மட்டும் நல்ல பார்மில் இருக்க  விஜய் சங்கர், கேதார் ஜாதவ்  இருவரும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர். அது தவிர மற்ற வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்திய அணி ஒருவழியாக இதனை சமாளித்து ஆடி வருகிறது.

தொடர் சோதனைகளால் இந்திய வீரர்கள்:

இந்திய அணி வீரர்கள் வரிசையாக காயம் அடைந்து தொடர்ந்து வருகிறார்கள். தொடக்க வீரர் ஷிகர் தவான் பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். அதேபோல், இந்திய அணியின் முக்கியமான பவுலரான புவனேஷ்வர்குமார் காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து வெளியேறினார். இவரும் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார். இதனைத் தொடர்ந்து பயிற்சியின் போது முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

வரவிருக்கும் மாற்றங்கள்:

முதல் நான்கு வீரர்கள் கே எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, பாண்டியா ஆகியோர் மாற மாட்டார்கள். அதேபோல் 5 அல்லது 6 வது இடத்தில் தோனி களமிறங்குவதிலும் மாற்றம் இல்லை. ஆனால் விஜய் சங்கருக்கு பதில் ஜடேஜா ஆடுவார். புவனேஷ்வர் குமாருக்கு பதில் தீபக் சாகர் களமிறங்க உள்ளார்.