இந்தியாவின் வரலாற்று சாதனைக்கு உதவிய தல தோனி


இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் தல தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி முதல்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா, தவான், விராத் கோஹ்லி ஆகிய விக்கெட்டுக்கள் விழுந்துவிட்ட நிலையில் தோனி தான் மட்டும் சிறப்பாக ஆடியது மட்டுமின்றி தன்னுடன் பேட்டிங் செய்த ஜாதவ்வுக்கு ஊக்கமளித்து அவரையும் நன்றாக விளையாட செய்தார்.

இருப்பினும் வழக்கம்போல் வின்னிங் ஷாட் அடித்து இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு உதவி தோனி தான் இப்பொழுதும் ஃபார்மில் இருப்பதை உறுதி செய்தார்