ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் காயம்: இந்திய தொடரில் இருந்து வெளியேற்றம்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னனி வேகப்பந்துவீச்சாளரான ஸ்டார்க், பயிற்சியின்போது காயமடைந்ததால் இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு இம்மாதம் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியில் ஆரோன்பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஹேன்ட்ஸ்ஹோம், மேக்ஸ்வெல், ஆஸ்டன் டர்னர், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, கும்மின்ஸ், நாதன் கோல்ட்டர், கானே ரிச்சர்ட்சன், ஜோசன் பெக்ரன் மார்ப், நாதன் லயன், ஆடம் ஜம்பா. டி ஆர்சி ஷார்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வேகப்பந்து வீரர் ஸ்டார்க் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் கானே ரிச்சர்ட்சன் அணிக்கு மீண்டும் அழைக்கப்படுவார்.