அறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாராவது டுவிட்டரில் இருக்கிங்களா? கஸ்தூரி சீண்டல்


கட்ந்த சில நாட்களாகவே அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் டுவிட்டரில் பெரும் போர் நடந்து வருவது தெரிந்ததே. இந்த போரில் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளின் பரிமாற்றங்களும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய் கிரகம் குறித்த ஒரு டுவீட்டை கஸ்தூரி தனது டுவிட்டரில் பதிவு செய்தார். இந்த பதிவில் ஒரு அஜித் ரசிகர் கஸ்தூரியை கேவலமாக திட்டியுள்ளார்.

இதனால் கொதித்து எழுந்த கஸ்தூரி, செவ்வாய் கிரகத்து செயற்கைகோள் பத்தி பதிவு போட்டா, அங்க வந்து கோத்தா கொம்மானு பேசுற கழிசடைகள். இதுங்கல்லாம் ‘தல’ பேரை இழுக்குதுங்கன்னு தெரிஞ்சுதான் ரசிகர் மன்றத்தை எப்போவோ கலைச்சுப்புட்டாரு. #தலமரியாதை #தலையெழுத்து. கண்ணியமான, அறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் ட்விட்டரில் உள்ளனரா? என்று அஜித் ரசிகர்களை சீண்டும் வகையில் ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.