அரிவாளை காட்டி மிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது

அரிவாளை காட்டி மிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது . இந்த படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தியதோடு சர்கார்’ படம் திரையிட்ட தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்து எரிந்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

இந்த நிலையில் விஜய்யின் தீவிர ரசிகர்கள் இருவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோவில் அதிமுகவினர்களை எச்சரிக்கும் வகையில் கத்தி, அரிவாளுடன் மிரட்டல் விடுக்கபப்ட்டிருந்தது. இந்த வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடும் பணியில் போலிசார் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் சஞ்சய், லிங்கதுரை என்ற மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.