Connect with us

அயோத்தியில் ராமர் கோவில்: இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில்: இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சர்ச்சைக்குரிய அயோத்தி இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும், அந்த இடத்தில் இந்துக்கள் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கப்படுகிறது என்றும், அதே நேரத்தில் அயோத்தியில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மாற்று இடத்தை மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம்.

  • அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.
  • 5 ஏக்கர் நிலத்தை வழங்க மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். 3 மாதத்தில் இந்த இடம் வழங்கப்பட வேண்டும்
  • இஸ்லாமியர்கள் புதிய மசூதி கட்டிக்கொள்ள வக்போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும்.
  • தீர்ப்பை 3 மாதத்தில் செயல்படுத்த வேண்டும்
  • பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுக்குச் சொந்தமான பகுதி என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை.
  • காலியிடத்தில் மசூதி கட்டப்படவில்லை.
  • அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
  • அந்த இடம் பாபர் மசூதி என்பது இஸ்லாமியர்களின் வாதம்.
  • பாபர் மசூதி கட்டப்படும் முன்பு அங்கிருந்த இடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல.
  • ஆவணங்களின்படி அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது.

இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top