அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்: தினகரன் அணியின் பெயர் அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்: தினகரன் அணியின் பெயர் அறிவிப்பு

மதுரை மேலூர் அருகே நடைபெற்று வரும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சற்றுமுன் டிடிவி தினகரன் தனது அணியின் பெயரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என அறிவித்துள்ளார். இந்த பெயரில் தான் இனி வரும் தேர்தல்களில் அவரும் அவருடைய ஆதரவாளர்களும் போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே குக்கர் சின்னத்தை டெல்லி ஐகோர்ட் தீர்ப்பின் மூலம் பெற்றுள்ள டிடிவி தினகரன் த’ற்போது தனி அமைப்பின் பெயர் மற்றும் கொடியை அறிவித்துள்ளார். எனினும் இது ஒரு அரசியல் கட்சி கிடையாது என்றும் அதிமுகவையும் இரட்டை இலையையும் கைப்பற்றுவதே தனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மதுரையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.