அதிரடியாக இஸ்லாமியர் வீட்டில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள் …

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய புகாரில், நெல்லை மேலப்பாளையம்பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி, நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள இப்ராஹிம் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

அதிரடியாக இஸ்லாமியர் வீட்டில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள் …

மக்களவையில் விவாதத்துக்குப் பின்னர், தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 


நாடாளுமன்றத்தில் விவாதித்தபோது, இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம், அதனால் இதில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றார் அப்போது பாஜகவுடன் கூட்டணியில் எம்.பி.,யாக இருந்த வை.கோ. உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, ”தவறாக பயன்படுத்த வாய்ப்பில்லை. இந்த சட்டம் இருந்தால் தான் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்” என்றார். 

இந்நிலையில் தற்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய புகாரில், நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி, நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள இப்ராஹிம் என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.