Connect with us

அதிமுக ஆட்சி கவிழ்ந்தவுடன் தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்: தமிழருவி மணியன்

செய்திகள்

அதிமுக ஆட்சி கவிழ்ந்தவுடன் தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்: தமிழருவி மணியன்

ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து கொண்டிருப்பதால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கின்றது.

இதற்கு நான் அளிக்கும் விளக்கம் என்னவெனில் எம்ஜிஆர் அவர்கள் கட்சி ஆரம்பித்தவுடனும், தேர்தல் நேரத்திலும் தேர்தலில் வெற்றி பெற்றவுடனும், படங்கள் நடித்து கொண்டிருந்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் அவர்‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் நடித்து முடித்த பின்னர் தான் முதலமைச்சர் பதவியை ஏற்றார்.

எனவே ரஜினிகாந்த் படங்கள் நடித்து கொண்டிருந்தாலும் அரசியல் கட்சிக்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். நாளைக்கே அதிமுக ஆட்சி கவிழ்ந்தால் நாளை மறுநாளே ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என தமிழருவி மணியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக ஆட்சி முழுமையான ஐந்து வருடங்களை பூர்த்தி செய்யும் என்று கூறப்படுவதால் ரஜினிகாந்த் 2021ஆம் ஆண்டு தேர்தலுக்கு ஒருசில மாதங்களுக்கு முன்னர்தான் கட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top