Connect with us

அடுத்த 3 நாட்களுக்கு மழை: விடுமுறை அறிவிப்பு வருமா?

செய்திகள்

அடுத்த 3 நாட்களுக்கு மழை: விடுமுறை அறிவிப்பு வருமா?

அடுத்த 3 நாட்களுக்கு சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளதால் விடுமுறை அறிவிப்பு வெளிவருமா? என்ற எதிர்பார்ப்பு பலரிடம் ஏற்பட்டுள்ளது

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் ’அடுத்த 3 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நல்ல மழை பெய்யும் என்றும் இந்த ஆண்டு எல்லா மழையும் வார இறுதி நாட்களிலேயே வருகிறது என்றும் கூறியுள்ளார்

மேலும் சென்னையை சுற்றி ஏராளமான மேகக்கூட்டங்கள் வரிசைகட்டி கொண்டுள்ளதாகவும், லேசான மழை இருந்தாலும் மகிழ்ச்சி அடையலாம் என்றும் கூறியுள்ளார்

இன்று காலை சென்னையில் மழை பெய்ததற்கு முக்கிய காரணம் கிழக்கு திசை காற்று என்றும் இது கடந்த வாரத்தில் ஏற்பட்டது போல் வலிமையானது அல்ல என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் லேசாக மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது

Continue Reading
To Top