அடிலெய்டு டெஸ்ட்: யாருக்கு வெற்றி


இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் அடிலெய்டில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி வருவதால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

india-vs-australia

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் சற்றுமுன் வரை அந்த அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற இன்னும் 157 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 250/10
இந்தியா 2வது இன்னிங்ஸ்: 307/10

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 235/10
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 166/6