அஜித் படத்தில் நடிக்கும் ரங்கராஜ் பாண்டே


சமீபத்தில் தந்தி டிவியில் இருந்து விலகிய ரங்கராஜ் பாண்டே, ரஜினி கட்சியில் இணைந்து அவருக்கு அரசியல் ஆலோசகராக இருப்பார் என்று கருதப்பட்டது.

ஆனால் இன்று நடைபெற்ற ‘தல 59’ படத்தின் பூஜையில் ரங்கராஜ் பாண்டே கலந்து கொண்டார். எனவே அவர் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை

முன்னதாக இன்று நடைபெற்ற ‘தல 59’ பூஜையில் போனிகபூர், எச்.வினோத், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். வழக்கம்போல் அஜித் இந்த பூஜையில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.